/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செஞ்சிலுவை சங்கத்தின் முன் 'ரவுண்டானா' ; மாற்றியமைக்கிறது மாநகராட்சி
/
செஞ்சிலுவை சங்கத்தின் முன் 'ரவுண்டானா' ; மாற்றியமைக்கிறது மாநகராட்சி
செஞ்சிலுவை சங்கத்தின் முன் 'ரவுண்டானா' ; மாற்றியமைக்கிறது மாநகராட்சி
செஞ்சிலுவை சங்கத்தின் முன் 'ரவுண்டானா' ; மாற்றியமைக்கிறது மாநகராட்சி
ADDED : பிப் 20, 2025 06:31 AM

கோவை; கோவை செஞ்சிலுவை சங்கம் முன்புள்ள 'ரவுண்டானா' வடிவமைப்பை மாற்றியமைக்கும் பணியை, மாநகராட்சி துவக்கியுள்ளது.
கோவை செஞ்சிலுவை சங்கம் முன், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்துக்கு எதிரே அமைந்துள்ள 'ரவுண்டானா' வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
வ.உ.சி., மைதானத்தில் இருந்து வருவோர், ஓசூர் ரோடு வழியாக வருவோர், உப்பிலிபாளையம், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாகனங்களில் வருவோர், செஞ்சிலுவை சங்க ரவுண்டானாவை சுற்றிச் செல்ல வேண்டும். அதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.
சமீபத்தில், மாநகராட்சி மூலமாக 'ரவுண்டானா' கட்டமைப்பு சீரமைக்கப்பட்டது. போக்குவரத்து நெருக்கடி சீராகாததால், மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழுவினர், போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி பொறியியல் பிரிவினர் இணைந்து, அப்பகுதியை ஆய்வு செய்தனர். சில மாற்றங்கள் செய்து, 'டிவைடர்'கள் அமைத்து, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
அதில், ஓசூர் ரோடு, வ.உ.சி., ரோடு, ரேஸ்கோர்ஸ் மற்றும் ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு என நான்கு வழித்தடங்களில் இருந்து 'ரவுண்டானா'வை நோக்கி, ஒரே வழித்தடத்தில் ஏராளமான வாகனங்கள் வந்ததால், போக்குவரத்து நெருக்கடி தீரவில்லை. கோர்ட் வளாகம் அருகே இடம் குறுகலாக இருந்ததால், வாகனங்கள் தேங்கின. வக்கீல்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெங்களூருவில் இருந்து சிறப்பு குழு வரவழைக்கப்பட்டு, வாகனங்களின் போக்குவரத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, வடிவமைப்பை மாற்றி வரைபடம் தயாரிக்கப்பட்டது. அதன்படி, 'ரவுண்டானா' மாற்றியமைக்கப்படுகிறது. பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

