/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செம்மொழி பூங்காவுக்கு ரூ. 39 கோடி விடுவிப்பு
/
செம்மொழி பூங்காவுக்கு ரூ. 39 கோடி விடுவிப்பு
ADDED : ஜூலை 03, 2025 10:03 PM
கோவை; கோவையில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழி பூங்கா கட்டுமான பணிக்கு மேலும், 39 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
கோவை காந்திபுரத்தில், 45 ஏக்கரில், ரூ.167.25 கோடியில் செம்மொழி பூங்கா உருவாக்கும் பணி நடந்து வருகிறது. 50 சதவீத பங்களிப்பு தொகையாக, ரூ.83.50 கோடியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்; 6 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியிருந்தது.
நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, முதல்கட்டமாக, 11 கோடி ரூபாயை விடுவித்தது. இன்னும் ஏராளமான பணிகள் செய்ய வேண்டியிருப்பதால், 50 கோடி ரூபாய் ஒதுக்க, மாநகராட்சியில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலரான கிராந்திகுமார், தமிழக அரசின் முதன்மை செயலர் ராஜேந்திர ரத்னு உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து, அறிவுரைகள் வழங்கினர்.
அப்போது, தமிழக அரசின் பங்களிப்பு தொகையான, 83.50 கோடி ரூபாயை விரைந்து ஒதுக்க வலியுறுத்தப்பட்டது. அதில், தற்போது, 39 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள தொகை விரைந்து வழங்கப்படும் என, உறுதி கூறப்பட்டுள்ளது.