/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோழி வியாபாரியிடம் ரூ.15 லட்சம் அபகரிப்பு
/
கோழி வியாபாரியிடம் ரூ.15 லட்சம் அபகரிப்பு
ADDED : அக் 25, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பி.என்.புதுாரில் சக்திவேல் என்பவர், இறைச்சி கோழி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது கடையில் பணியாற்றி வரும் வேளாங்கன்னி என்பவர், கடைகளுக்கு கோழி சப்ளை செய்து வந்தார். பலருக்கு கோழி விற்ற பணத்தை கம்பெனி கணக்கில் செலுத்தாமல், 15 லட்சம் ரூபாயை அபகரித்தார். இது குறித்து சக்திவேல் கேட்ட போது, முறையாக பதில் அளிக்கவில்லை. புகாரின் பேரில், வேளாங்கன்னி மீது, சாய்பாபா காலனி போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

