/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வக்கீல் சேம்பர் அறைக்கு ரூ.21.6 லட்சம் வாடகை பாக்கி
/
கோவை வக்கீல் சேம்பர் அறைக்கு ரூ.21.6 லட்சம் வாடகை பாக்கி
கோவை வக்கீல் சேம்பர் அறைக்கு ரூ.21.6 லட்சம் வாடகை பாக்கி
கோவை வக்கீல் சேம்பர் அறைக்கு ரூ.21.6 லட்சம் வாடகை பாக்கி
ADDED : ஜன 28, 2025 11:58 PM
கோவை; கோவை நீதிமன்ற வளாகத்திலுள்ள சேம்பர் அறைக்கு, 21.6 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தாமல், வக்கீல்கள் நிலுவை வைத்துள்ளனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மூன்று தளங்களை கொண்ட வழக்கறிஞர்கள் சேம்பரில், 66 வக்கீல்கள் அறைகள் , வக்கீல் சங்க அலுவலகம், கலையரங்கம், கேன்டீன் உள்ளது. ஒரு அறைக்கு, ஐந்து பேர் வீதம் மொத்தம், 330 வக்கீல்களுக்கு, சீனியாரிட்டி அடிப்படையில், மிக குறைந்த வாடகை கட்டணத்தில், அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தரை தளத்தில் அறைக்கு மாத வாடகை, 680 ரூபாய், முதல் தளத்திற்கு, 644 ரூபாய், இரண்டாவது தளத்திற்கு, 610 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு பெற்ற வக்கீல்களிடம், மாத வாடகையாக அதிகபட்சமாக , 136 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
வாடகை கட்டணத்தை, நீதிமன்ற கட்டட பராமரிப்பு அலுவலரிடம் செலுத்த வேண்டும். ஒதுக்கீடு பெற்றவர்களில், 300 வக்கீல்கள், 2024, டிசம்பர் வரையில், மொத்தம், 21.61 லட்சம் ரூபாய் வாடகை கட்டாமல் நிலுவை வைத்துள்ளனர்.
4.94 லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தப்படவில்லை. 30 வக்கீல்கள், டிச., வரையில் வாடகை முழுவதையும் செலுத்தியுள்ளனர்.
இத்தகவலை, மாவட்ட நீதித்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.