/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொட்டகை அமைக்க ரூ. 22 லட்சம் ஒதுக்கீடு
/
கொட்டகை அமைக்க ரூ. 22 லட்சம் ஒதுக்கீடு
ADDED : நவ 05, 2025 12:10 AM
அன்னூர்: தூய்மை பாரத இயக்கத்தில், கொட்டகை அமைக்க, 22 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் ஆம்போதி ஊராட்சியில் திப்பநாயக்கன்பாளையம், காரேகவுண்டன்பாளையம் ஊராட்சியில் கெம்பநாயக்கன்பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் செந்தாம் பாளையத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் கொட்டகை அமைக்க தலா 2 லட்சம் வீதம் 6 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதே திட்டத்தில் பிளாஸ்டிக் சேகரிக்கும் கொட்டகை அமைக்க, கரியாம்பாளையம், காட்டம்பட்டி, குப்பனூர், மசக்கவுண்டன் செட்டிபாளையம், காரே கவுண்டன்பாளையம், குன்னத்தூர், வடவள்ளி, பிள்ளையப்பம்பாளையம் என எட்டு ஊராட்சிகளில் தலா 2 லட்சம் ரூபாய் செலவில் கொட்டகை அமைக்க 16 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணி துவங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

