ADDED : ஜூன் 20, 2025 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.
ஹிந்து அறநிலையத்துறை துணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ஹர்ஷினி, செயல் அலுவலர் சபரீஷ்குமார், அறங்காவலர்கள் பொன்னுசாமி, விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.
உண்டியலில், 26 லட்சத்து 48ஆயிரத்து 510 ரூபாய் ரொக்கம், 161 கிராம் தங்கம், 273 கிராம் வெள்ளி இனங்கள் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்ததாக, செயல் அலுவலர் தெரிவித்தார்.
- நமது நிருபர் -