/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ. 45 லட்சம் ஒதுக்கீடு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
/
ரூ. 45 லட்சம் ஒதுக்கீடு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
ரூ. 45 லட்சம் ஒதுக்கீடு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
ரூ. 45 லட்சம் ஒதுக்கீடு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
ADDED : மார் 18, 2025 04:34 AM
கோவில்பாளையம் : ஒரு லட்சம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி கட்ட, 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி, 12 மற்றும் 14வது வார்டுகளில் 1,500 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதற்காக பேரூராட்சி சார்பில், முதல்வர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 15வது நிதி குழு மானியத்தில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கு, 45 லட்சம் ரூபாய் ஒதுக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து தொட்டி கட்டுவதற்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
'இந்த மேல்நிலைத் தொட்டி வாயிலாக, ஸ்ரீ கார்டன், திருச்செந்துார் கார்டன், ஸ்ரீ வாரி கார்டன், அண்ணாமலை கார்டன் உள்ளிட்ட 20 குடியிருப்பு பகுதிகளில் 1,500 குடும்பங்கள் பயன்பெறும்,' என, எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி தெரிவித்தார்.