/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.50 லட்சத்தில் வகுப்பறை பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பு
/
ரூ.50 லட்சத்தில் வகுப்பறை பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பு
ரூ.50 லட்சத்தில் வகுப்பறை பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பு
ரூ.50 லட்சத்தில் வகுப்பறை பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பு
ADDED : ஜூன் 22, 2025 02:10 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, அரசம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் கோவை ரோட்டரி மெட்ரோபாலிஸ் கிளப் இணைந்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 'மகாதேவன் நுாற்றாண்டு விழா கட்டடம்' என்ற பெயரில், நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டன. அதன் திறப்பு விழா நடந்தது.
விழாவில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன் பேசுகையில், ''எனது தந்தை பள்ளிக்கு சென்றதில்லை. ஆனால், இன்று அவர் பெயரில் பள்ளி கட்டடம் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள், நல்ல நிலையை அடைய வேண்டும்,'' என்றார்.
தமிழக அரசு பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலர் சந்திரமோகன், கோவை கலெக்டர் பவன்குமார், கோவை ரோட்டரி மெட்ரோபாலிஸ் கிளப் தலைவர் வரதராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் வித்தியா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.