/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.70 லட்சம் கட்டடம்: 15 மாதங்களாக முடக்கம்
/
ரூ.70 லட்சம் கட்டடம்: 15 மாதங்களாக முடக்கம்
ADDED : மே 23, 2025 01:10 AM

அன்னுார் : அன்னுார் அருகே, 70 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட, சுய உதவி குழு கூட்டமைப்பு கட்டடம் 15 மாதங்களாக முடங்கி கிடக்கிறது.
அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குப்பனூர், குன்னத்தூர், பொகலூர், அ.மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில், தலா 70 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில், சுய உதவி குழு கூட்டமைப்பு கட்டடம் கட்டப்பட்டது.
இந்த கட்டடம், பொதுமக்கள் சுப நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கு விடப்படுகிறது. சுய உதவி குழு கூட்டமைப்பு சார்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அ.மேட்டுப்பாளையத்தில், 70 லட்சம் ரூபாயில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, 2024 பிப்ரவரியில் ஒப்படைக்கப்பட்டது. ஊராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு, 15 மாதங்கள் ஆகிவிட்டது. எனினும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இதுவரை வரவில்லை.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அரசு 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி கட்டடம் கட்டியும் பயன்பாட்டுக்கு வராததால் கூடுதல் கட்டணம் செலுத்தி வேறு இடங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய நிலை உள்ளது.
ஊராட்சி நிர்வாகம் இக்கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் மிகக் குறைந்த கட்டணத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முடியும்' என தெரிவித்தனர்.