ADDED : மே 01, 2025 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர் : கோவையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கோடை கால பண்பு பயிற்சி முகாம் நடக்கிறது.
கோவைப்புதூர் அடுத்து அறிவொளி நகர் பகுதியிலுள்ள, கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி வளாகத்தில், 3ம் தேதி முதல் 18ம் தேதி வரை, தென் தமிழக அளவில் இம்முகாம் நடக்கிறது. கோவை கோட்ட செயலாளர் அஜய்கோஷ் தலைமையில் நடக்கும் இம்முகாமில், ஆயிரம் பேர் வரை பங்கேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்கேற்போர் தங்க, கல்லூரி விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

