/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடல் வலியை ஏற்படுத்தும் 'ரம்பிள் ஸ்டிரிப்கள்'
/
உடல் வலியை ஏற்படுத்தும் 'ரம்பிள் ஸ்டிரிப்கள்'
ADDED : ஜூலை 10, 2025 10:19 PM

சூலுார்; சுல்தான்பேட்டை - காம நாயக்கன் பாளையம் ரோட்டில், அதிகளவில் உள்ள ரம்பிள் ஸ்டிரிப்களை அகற்ற வேண்டும், என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம்-பொள்ளாச்சி ரோட்டில், சுல்தான்பேட்டை முதல் காமநாயக்கன் பாளையம் வரை ரோடு விரிவாக்க பணி நடந்தது. பல இடங்களில் ரம்பிள் ஸ்டிரிப்களை நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் கூறியதாவது:
சுல்தான்பேட்டை - காமநாயக்கன் பாளையம், காம நாயக்கன் பாளையம் - பல்லடம் வரை, மொத்தம், 21 இடங்களில் ரம்பிள் ஸ்டிரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இடத்திலும் தலா, ஆறு ரம்பிள் ஸ்டிரிப்புகள் உள்ளன.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகனங்களின் உதிரி பாகங்கள் உடைகின்றன. இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு உடல் வலி ஏற்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆம்புலன்சில் செல்லும் நோயாளிகளும் அவதிக்குள்ளாகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. விரைவில், மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.