/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 09, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பெரம்பலுார் மாவட்ட கலெக்டரின் அரசு ஊழியர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கலெக்டர் அலுவலகம் முன் கருப்பு பேட்ஜ் அணிந்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியிட மாறுதலில் உள்ள அரசியல் தலையீடுகளை தவிர்த்தல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணி விதி அமலாக்கம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திரளாக பங்கேற்றனர்.