UPDATED : நவ 15, 2026 12:00 AM
ADDED : நவ 14, 2026 10:22 PM
கோவை: சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் – கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, வரும் 18 முதல் அடுத்தாண்டு ஜன., 20ம் தேதி வரை, சென்னையில் இருந்து புதன்தோறும் மதியம் 3:10க்கு புறப்படும் ரயில் (06119) மறுநாள் காலை 7:20க்கு கொல்லம் சென்றடையும்.
கொல்லத்தில் இருந்து 19 முதல் ஜன., 21 வரை வியாழன்தோறும் காலை 10:40க்கு புறப்படும் ரயில் (06120) மறுநாள் அதிகாலை 3:30க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, எர்ணாகுளம் டவுன் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும்.
அதேபோல், கொல்லத்தில் இருந்து வரும் 17ம் தேதி காலை 10:55க்கு புறப்படும் ரயில் (07190) போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் இரவு 7:00க்கு சார்லப்பள்ளி (தெலுங்கானா) அடையும். அங்கிருந்து வரும் 20 முதல் டிச., 25 வரை வெள்ளிதோறும் இரவு 11:45க்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (07180) ஞாயிறுதோறும் காலை 7:55க்கு கொல்லம் அடைகிறது. கொல்லத்தில் இருந்து வரும் 22 முதல் டிச., 27 வரை ஞாயிறுதோறும் காலை 10:40க்கு புறப்படும் ரயில் (07181) திங்கள்தோறும் இரவு 7:00க்கு சார்லப்பள்ளி அடையும் என, தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
