ADDED : டிச 23, 2024 10:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; வால்பாறையில் துாயஇருதய ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை துாயஇருதய ஆலயத்தின் நுாற்றாண்டு விழா, இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு பொள்ளாச்சி மறைமாவட்ட முதன்மை குரு ஜேக்கப் தலைமையில் கொடியேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து, கருமலை மாதா ஆலயத்தில் காலை, 11:00 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. விழாவில்,நாள் தோறும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் திவ்யநற்கருணை நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக, வரும் 28ம் தேதி ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை ஜெகன்ஆண்டனி மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.