/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புனித செபஸ்தியார் தேர்த்திருவிழா
/
புனித செபஸ்தியார் தேர்த்திருவிழா
ADDED : ஜன 20, 2025 06:18 AM

மேட்டுப்பாளையம், : மேட்டுப்பாளையத்தில் புனித செபஸ்தியார் தேர் திருவிழா நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் காட்டூரில் புனித சூசையப்பர் தேவாலயம் உள்ளது. இங்கு புனித செபஸ்தியார் தேர் திருவிழா கொடியேற்றம், கடந்த பத்தாம் தேதி நடைபெற்றது. பெரியநாயக்கன்பாளையம் பாதிரியார் பிரான்சிஸ் கொடியேற்றி வைத்து, திருப்பலியை நிறைவேற்றினார். அதைத் தொடர்ந்து, 18ம் தேதி வரை ஆடம்பர திருப்பலிகள் நடந்தன.
மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து, காட்டூர் புனித சூசையப்பர் தேவாலயத்திற்கு தேர் எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று மாலை திருவிழா ஆடம்பர திருப்பலியை பாதிரியார்கள் ஜஸ்டின், சுராஜ் ஆகியோர் நிறைவேற்றினர். அதை தொடர்ந்து புனித செபஸ்தியார், புனித சூசையப்பர், மாதா ஆகியோரின் உருவச் சிலைகள் அடங்கிய, தேர் பவனி நடைபெற்றது.
ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர் பவனி, காட்டூரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து, மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் ஆண்டோ ராயப்பன், விழா ஒருங்கிணைப்பாளர்கள் பாபு, வில்சன், பிஜு மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.