/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமத்துார் மின்தடை ரத்து மின்வாரியத்தினர் தகவல்
/
சமத்துார் மின்தடை ரத்து மின்வாரியத்தினர் தகவல்
ADDED : ஜன 08, 2025 10:43 PM
பொள்ளாச்சி,; சமத்துார் பகுதியில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமத்துார் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட, ஆவல்சின்னாம்பாளையம், கரட்டுப்பாளையம், சமத்துார், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், கொங்கலப்பம்பாளையம், பொன்னாபுரம், பொன்னாச்சியூர், பில்சின்னாம்பாளையம், ஜமீன்கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், குருஞ்சேரி, பெத்தநாயக்கனுார், சங்கம்பாளையம், ரமணமுதலிபுதுார், நம்பியமுத்துார் மற்றும் அகிலாண்டாபுரம் பகுதிகள் உள்ளன.
இப்பகுதியில், இன்று (9ம் தேதி), மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, மின்தடை செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருவதால், மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
வழக்கம்போல, மின் விநியோகம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை, பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

