sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சட்டசபை தேர்தல் நெருங்குவதால் சங்கனுார் ஓடை ஆக்கிரமிப்புகள் தப்பின

/

 சட்டசபை தேர்தல் நெருங்குவதால் சங்கனுார் ஓடை ஆக்கிரமிப்புகள் தப்பின

 சட்டசபை தேர்தல் நெருங்குவதால் சங்கனுார் ஓடை ஆக்கிரமிப்புகள் தப்பின

 சட்டசபை தேர்தல் நெருங்குவதால் சங்கனுார் ஓடை ஆக்கிரமிப்புகள் தப்பின


ADDED : ஜன 09, 2026 05:09 AM

Google News

ADDED : ஜன 09, 2026 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து வரும் மழை நீர், மேற்குப்பகுதியில் இருந்து நொய்யல் ஆறாகவும், வடக்கு பகுதியில் இருந்து சங்கனுார் ஓடை வழியாகவும் பயணிக்கிறது.

இந்த ஓடை மேட்டுப்பாளையம் ரோட்டில் கவுண்டம்பாளையம் எருக் கம்பெனி பகுதியில் நகருக்குள் நுழைகிறது. சத்தி ரோடு, அவிநாசி ரோட்டை கடந்து, திருச்சி ரோடு வழியாகசிங்காநல்லுார் செல்கிறது.

கரையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான வீடுகள் இருப்பதால், ஓடை சுருங்கியிருக்கிறது. ஆவராம்பாளையம் ரோடு சந்திப்பில் இருந்து நவஇந்தியாவுக்கு செல்லும் வழித்தடத்தில் இந்திரா நகர், கருப்புக்கல் தோட்டம் பகுதியில் கரையை ஆக்கிரமித்து ஓட்டு வீடுகள், காய்கறி கடை, பழக்கடை, டூவீலர் ஒர்க் ஷாப் உள்ளிட்ட கடைகள் உள்ளன.

நுாறடி ரோடு, காந்திபுரம், கணபதி மற்றும் ஆவராம்பாளையத்தில் இருந்து அவிநாசி ரோட்டுக்கு செல்வதற்கு இவ்வழித்தடம் முக்கியமானது. மேம்பாலம் கட்டியிருப்பதால், இருபுறமும் சாலை அகலம் சுருங்கியுள்ளது. வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி, சாலையை விஸ்தரிக்க மக்கள் கோரினர்.

மேம்பாலத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்ததால், அப்பகுதியில் இருந்த உயரழுத்த மின் கோபுரம் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் கடந்தாண்டு உத்தரவிட்டார். மாற்று வீடுகள் வழங்கிய பிறகே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதனால் நடவடிக்கையை மாநகராட்சி நிறுத்தியது.

”உயரழுத்த மின் கோபுரத்தை அகற்றி, ரூ.10 கோடி செலவழித்து மின்புதை வடம் பதிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு வீடுகளையும் அகற்றினால், ஆவராம்பாளையம் சந்திப்பில் இருந்து நவ இந்தியா வரை 100 அடிக்கு ரோடு அகலமாகும். 10 கோடி செலவழித்தும் பயனில்லாமல் இருக்கிறது” என, சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில், அதன் உறுப்பினர் கதிர்மதியோன் முறையிட்டார்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ”தேர்தல் நெருங்குவதால் இப்போதைக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வாய்ப்பில்லை” என்றனர்.






      Dinamalar
      Follow us