/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் டம்ளர் ;டாஸ்மாக் பாரால் சுகாதார சீர்கேடு

ADDED : மார் 01, 2024 10:23 PM

சூலுார்:ராவத்துார் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் இருந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அத்தப்பகவுண்டன் புதுார் பிரிவில் இருந்து ராவத்துார் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகிலேயே பாரும் செயல்படுகிறது. இந்த பாரில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், குளிர்பான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் அனைத்தும் அருகில் உள்ள காலி இடத்தில் கொட்டப்பட்டு, மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ''பாரில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், குளிர்பான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் ரோட்டின் இரு புறங்களிலும் குவிந்து கிடக்கின்றன. இரவு நேரத்தில் இந்த ரோட்டில் போக்குவரத்து குறைவு என்பதால் ரோட்டிலேயே அமர்ந்து குடித்து விட்டு பாட்டில்கள், டம்ளர்களை வீசி விடுகின்றன. கடைக்கு அருகில் பிளாஸ்டிக் டம்ளர்கள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.
காற்றில் பறந்து விளை நிலங்களை ஆக்கிரமிக்கின்றன. மண்ணில் புதைந்து சுற்றுச்சூழலை கெடுக்கின்றன. குப்பை கொட்டுவதை தடுக்க இருகூர் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.