ADDED : நவ 16, 2026 03:24 PM

கோவை: சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வாரம் துாய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஸ்டிரைக் முடிவுக்கு வந்தும் சாய்பாபா கோவில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று (நவ.,16) போராட்டத்தில் ஈடுபட்டனர். 3
அவர்கள் கூறுகையில், கவுதம், கனிமொழி ஆகிய சூப்பர்வைசர்கள், தூய்மை பணியாளர் ஸ்டாலின் பிரபு ஆகியோரை டிஸ்மிஸ் செய்துள்ளனர். டிஸ்மிஸ் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
ஒப்பந்த நிறுவனத்திடம் கேட்டபோது, ஒரு சூப்பர்வைசர் கடையில் பணம் கேட்டதாக புகார் வந்துள்ளது. அட்டண்டென்சுக்காக மற்ற இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரை சஸ்பெண்ட் தான் செய்துள்ளோம். விசாரணை குழு அமைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்றனர்.
