ADDED : செப் 29, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
காரமடை: காரமடை நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. இங்கு, ஒப்பந்த அடிப்படையில், 40 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில், ‘ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் எங்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்ததாரர்கள் மாறி மாறி வருவதால், பி.எப்.,பிடிக்கும் நடைமுறை முறையாக செயல்படுவதில்லை. மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு, எங்களிடம் இருந்து பி.எப்., என்ற பெயரில் பிடித்தம் செய்த தொகையை, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்’ என்றனர்.
