ADDED : நவ 02, 2026 05:41 PM

அ நிறம் | அளவு
கோவை: மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு போனஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ரோட்டில் சென்டர் மீடியன்களை சுத்தப்படுத்தும் 250 பணியாளர்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் போனஸ் கேட்டு இன்று (நவ.,2) மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த தீபாவளிக்கு ரூ.100 மட்டுமே போனஸ் கிடைத்தது. இந்த முறை இதர ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு இணையான போனஸ் வேண்டும் என, கமிஷனர் ரவி தேஜாவிடம் மனு கொடுத்தனர்.
அவர்களிடம் சுகாதார பிரிவு அதிகாரிகள் பேச்சு நடத்தினர். ஓரிரு நாட்களில் நீங்கள் கேட்டபடி போனஸ் வழங்கப்படும் என அவர்கள் கூறியதையடுத்து பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
