தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தூய்மை பணியாளர்கள் நாளை(நவ.9) முதல் ஸ்டிரைக்

தூய்மை பணியாளர்கள் நாளை(நவ.9) முதல் ஸ்டிரைக்

தூய்மை பணியாளர்கள் நாளை(நவ.9) முதல் ஸ்டிரைக்

1


UPDATED : நவ 08, 2026 04:22 PM

ADDED : நவ 08, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 04:22 PM ADDED : நவ 08, 2026 04:00 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாநகராட்சியில் 4,500 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளனர். தீபாவளிக்கு முன் போனஸ், பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போனஸ் ஒப்பந்த பேச்சு தோல்வியடைந்தது.

நவ.,9ம் தேதி (நாளை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி அனைத்து தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், நாளை காலை தூய்மை பணியாளர்கள் தங்கள் கோரிக்கையை முழக்கமிடுகின்றனர்.

வேலை நிறுத்தத்தால் மாநகர பகுதிகளில் குப்பை சேகரிக்கும் வேலை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us