/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பதவி உயர்வுக்கு காத்திருக்கும் துாய்மை பணியாளர்கள்
/
பதவி உயர்வுக்கு காத்திருக்கும் துாய்மை பணியாளர்கள்
பதவி உயர்வுக்கு காத்திருக்கும் துாய்மை பணியாளர்கள்
பதவி உயர்வுக்கு காத்திருக்கும் துாய்மை பணியாளர்கள்
ADDED : ஜன 20, 2025 06:13 AM
அன்னூர் : தமிழக அரசு தூய்மை பணியாளர்களில் எந்த புகார் இல்லாமல் தொடர்ந்து நிரந்தரமாக்கப்பட்டு 15 ஆண்டுகள் பணிபுரிந்த குறைந்தபட்ச கல்வி தகுதி உள்ளவர்களுக்கு துப்புரவு மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்கலாம் என தெரிவித்துள்ளது.
இதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில், பல பேரூராட்சிகளில், தகுதியுள்ள தூய்மை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கும், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகள் ஆகியும், இதுவரை நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் சிலர் கூறுகையில், 'குறைந்தபட்ச கல்வி தகுதி இருந்தும், நிரந்தரமாக்கப்பட்ட பிறகு 15 ஆண்டுகள் பணிபுரிந்தும் எந்த புகாருக்கும் இடமெல்லாம் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.
அரசு உடனடியாக நிலுவையில் உள்ள பதவி உயர்வு உத்தரவை உடனே பிறப்பித்து தூய்மை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்,' என்றனர்.

