/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடு போட வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம்
/
ரோடு போட வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம்
ADDED : மே 15, 2025 11:44 PM

சூலுார்; பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக உள்ள ரோட்டை சீரமைக்க கோரி, நாற்று நடும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
சூலுார் அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாலு கார்டன், லட்சுமி நகர், லட்சுமி கார்டன் மற்றும் நாகையன் தோட்டத்துக்கு செல்லும் ரோடு, பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால், மேடு, பள்ளமாக மாறியது.
இதனால், அந்த ரோட்டில் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல முறை மனுக்கள் கொடுத்தும் எந்தவெரு தீர்வும் கிடைக்காமல் வேதனையில் இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் பெய்த மழையால் ரோடு சேறும்,சகதியுமாக மாறியது. இதனால், விரக்தி அடைந்த அப்பகுதி மக்கள், ரோட்டை விரைந்து சீரமைக்க கோரி, ரோட்டில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில்,' ரோட்டை விரைந்து சீரமைக்கவில்லை என்றால், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டும், திருச்சி ரோட்டில் மறியல் செய்யவும் முடிவு செய்துள்ளோம்,' என்றனர்.