/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெட்டி சாய்க்கப்படும் மரங்களை காப்பாற்றுங்க!
/
வெட்டி சாய்க்கப்படும் மரங்களை காப்பாற்றுங்க!
ADDED : மார் 20, 2025 11:34 PM

பொள்ளாச்சி,: பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், குடியிருப்பு பகுதிகளில் அதிகளவு மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்களின் கிளைகளை உரிய அனுமதி பெறாமல் வெட்டப்படுவது தொடர்கதையாகி உள்ளது.
வேம்பு, புங்கை,வஞ்சி, கொன்றை உள்ளிட்ட மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்படுகின்றன. இந்நிலையில், ஜமீன்கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, மகாத்மா காந்திநகர் குடியிருப்பு பகுதியில், மரங்களை சிலர், வெட்டி சாய்ப்பதாக புகார் எழுந்துள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
கிராமங்களில், மரங்கள் இடையூறாக இருப்பதாகவும்; இலைகள், பூக்கள் விழுவதாகவும் கூறி, ஒரு சிலர் மரங்களை வெட்டி சாய்ப்பதை வழக்கமாக்கி வருகின்றனர். வருவாய் துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும்; அனுமதி பெற்ற பின்னரே மரக்கிளைகளை வெட்ட வேண்டும் என்ற விதிமுறைகளை பின்பற்றுவது கிடையாது.
மரங்கள் வெட்டுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி பெறாமல் வெட்டப்படும் மரங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்களை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.