/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.சி. எஸ்.டி. மாநில ஆணைக்குழு ஆய்வு
/
எஸ்.சி. எஸ்.டி. மாநில ஆணைக்குழு ஆய்வு
ADDED : ஜன 17, 2026 05:27 AM
பொள்ளாச்சி: 'கல்வி, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்ற பழங்குடியின மக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உலாந்தி, கோழிகமுத்தி வனச்சரக பகுதிகளில், அரசு சார்பில் வீடுகள் கட்டித்தரப்படுகின்றன.
பழங்குடியின மக்களுக்கு கட்டப்படும் வீட்டுப்பணிகள் மற்றும் வசதிகள் குறித்து நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைக்குழு (எஸ்.சி. எஸ்.டி. ஆணைக்குழு) உறுப்பினர்கள், வன்கொடுமை தடுப்பு சட்டக்குழு உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பழங்குடியின மக்களிடம், 'வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். 'அங்கன்வாடி மையம், மருத்துவ வசதி மேம்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்,' என, குழுவினரிடம் வலியுறுத்தினர்.
தமிழக எஸ்.சி. எஸ்.டி. மாநிலஆணைக்குழு உறுப்பினர் செல்வக்குமார் கூறியதாவது:
பழங்குடியின மக்களுக்காக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பணி நிரந்தரம், தனி வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.
இங்குள்ள பழங்குடியின மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு, இரண்டு ஆசிரியர்கள் கூடுதலாக நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்வி, சுகாதார நிலையம் மேம்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வனத்துறையோடு இணைந்து அரசுக்கு தெரிவித்து பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

