/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
/
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
ADDED : மே 13, 2025 01:09 AM
கோவை, ; கோவை, குரும்பபாளையத்திலிருந்து செயல்படும், ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, 'கற்கை நன்றே' என்ற கல்வி உதவித் திட்டத்தை, செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டம் வாயிலாக, ஆண்டுதோறும் திறமையான, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியரை கண்டறிந்து, அவர்களின் முழுமையான கல்லூரி மேல் படிப்புக்காக, கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
கல்வி உதவித் தொகை பெற, ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படும், அல்லது பெற்றோர் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும். பிளஸ் 2, தேர்வில் குறைந்த பட்சம் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், https://anandachaitanya.org/karkai-nandre/ என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள, லிங்கில் விண்ணப்பிக்கலாம்.
அரசு கல்லுரிகளில், முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, www.anandachaitanya.org, Info@anandachaitanya.org.