/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட அளவிலான செஸ் போட்டி அசத்திய பள்ளி மாணவ, மாணவியர்
/
மாவட்ட அளவிலான செஸ் போட்டி அசத்திய பள்ளி மாணவ, மாணவியர்
மாவட்ட அளவிலான செஸ் போட்டி அசத்திய பள்ளி மாணவ, மாணவியர்
மாவட்ட அளவிலான செஸ் போட்டி அசத்திய பள்ளி மாணவ, மாணவியர்
ADDED : ஜன 11, 2025 09:03 AM

கோவை : கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வி துறை சார்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி நேற்று நடந்தது.
இதில், 9, 12, 15, 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர், 414 பேர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் ஜெகதீபன் போட்டிகளை துவக்கி வைத்தார்.
வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, தனித்தனியே ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.1,000, இரண்டாம் பரிசாக ரூ.750, மூன்றாம் பரிசாக ரூ.500 வழங்கப்பட்டது. தவிர, ஒவ்வொரு பிரிவிலும் மாணவ, மாணவியருக்கு தலா, 10 டிராபி என நான்கு பிரிவுகளில், 80 டிராபிகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில், உடற்கல்வி இயக்குனர் குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.