/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்கள் போஸ்ட் ஆபீஸ் விசிட்
/
பள்ளி மாணவர்கள் போஸ்ட் ஆபீஸ் விசிட்
ADDED : ஜன 15, 2024 10:00 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அருகே உள்ள, விவேக் வித்தியா மந்திர் பள்ளி மாணவர்கள் போஸ்ட் ஆபீஸ் விசிட் செய்தனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள விவேக் வித்தியா மந்திர் பள்ளியில் இருந்து, மூன்றாம் வகுப்பு படிக்கும், 80 மாணவர்கள் கிணத்துக்கடவு போஸ்ட் ஆபீஸ் விசிட் செய்தனர். இதில், மாணவர்கள் போஸ்ட் கார்டு வகைகள், ஸ்டாம்ப் வகைகள் மற்றும் மாணவர்களுக்கான சேமிப்பு கணக்கு துவங்குதல் மற்றும் பிற சேவைகள் குறித்து, மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், மாணவர்கள் ஆர்வமாக தங்களின் உறவினர்களுக்கு போஸ்ட் கார்டு மற்றும் தபால்கள் எழுதி, அங்குள்ள போஸ்ட் பாக்ஸில் போட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு துணை அஞ்சலக அதிகாரி ரங்கராஜ், போஸ்ட் ஆபீஸ் பணியாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.