/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி
/
பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி
ADDED : நவ 28, 2025 05:09 AM

கோவை: பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி, நவ இந்தியா ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் நடந்து வருகிறது. பத்து அணிகள் பங்கேற்றுள்ள போட்டி, லீக் சுற்று முறையில் நடத்தப்படுகிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் முதல்வர் சிவகுமார், போட்டியை துவக்கி வைத்தார். மாணவர்களுக்கான முதல் போட்டியில், ஏ.பி.சி., பள்ளி அணியும், வட்டமலை பாளையம் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணியு ம் விளையாடின.
அதில் 12--25,14--25 என்ற கணக்கில், ராமகிருஷ்ணா பள்ளி அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில், பொள்ளாச்சி என்.ஜி.என்.ஜி., அணியும் ஏ.பி.சி., பள்ளி அணியும் மோதின. இதில், 25--12,25--18 என்ற கணக்கில் என்.ஜி.என்.ஜி., பள்ளி அணி வெற்றி பெற்றது.
பெண்களுக்கான வாலிபால் போட்டியில், அன்னை வயலட் பள்ளி அணியும் ஏ.பி.சி., பள்ளி அணியும் விளையாடின. 25--15, 25--20 என்ற கணக்கில் அன்னை வயலட் பள்ளி அணி வெற்றி பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை செய்துள்ளது.

