/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேட்மிண்டன் போட்டியில் சாதித்த பள்ளி மாணவர்கள்
/
பேட்மிண்டன் போட்டியில் சாதித்த பள்ளி மாணவர்கள்
ADDED : செப் 05, 2025 10:14 PM

கோவை:
கோவை கேம்போர்டு சர்வதேச பள்ளி சார்பில்,'கேம்போர்டு பெதர் பிளைட் பேட்மிண்டன் போட்டி 2025' பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஒன்பது, 11 மற்றும் 13 வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒன்பது வயதினர் பிரிவில், பி.எஸ்.பி.பி., பள்ளி மாணவர் ஷம்ருத், தி கேம்போர்ட் சர்வதேசப் பள்ளி மாணவி அக்சரா, 11 வயதினர் பிரிவில் சுகுணா பிப்ஸ் பள்ளி மாணவர் சஞ்சய், ரமணியின் பேட்மிண்டன் அகாடமி மாணவி அத்விகா ஆகியோர் வெற்றி பெற்றனர். 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், எஸ்.பி.என்., ஸ்கூல் ஆப் பேட்மிண்டன் மாணவர் சித்தேஷ்வர், தி கேம்போர்டு இன்டர்நேசனல் மாணவி அக்சிதாஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களை கேம்போர்டு பள்ளி தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை, பள்ளி முதல்வர் பூனம் சயால் ஆகியோர் பாராட்டினர்.