காய்கறிகளை காட்சிப்படுத்தி பள்ளி மாணவர்கள் அசத்தல்
காய்கறிகளை காட்சிப்படுத்தி பள்ளி மாணவர்கள் அசத்தல்
UPDATED : நவ 27, 2026 05:52 PM
ADDED : நவ 27, 2026 05:52 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒனறிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில், அன்றாவட வாழ்வில் காய்கறிகளின் இன்றியமையாமை குறித்தும், மாணவர்களின் இயற்கை விவசாய ஆர்வம், உழவின் மேன்மை, ஊரில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் அனுசுயாதேவி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் தினகரன், ஆசிரியர் சத்தியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மேலாண்மை குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
தலைமையாசிரியர் கூறியதாவது:
மாணவர்கள் தங்களது ஊரில் விளையும் காய்கறிகளை நேரடியாக காட்சிப்படுத்தி விற்பனை செய்வதன் வாயிலாக, உழவுத்தொழிலின் சிறப்பு, உள்ளூர் விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
வணிகம் சார்ந்த அடிப்படைத்திறன்கள், கணித அறிவு, பண மேலாண்மை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை நேரடியாக அறிந்து கொண்டனர். மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த காய்கறிகளை நுகர்வோருக்கு விற்பனை செய்தனர்.
இதனால், அன்றாட வாழ்வில் காய்கறிகளின் முக்கியத்துவம், தாவரங்கள் – மனித இனத்துக்கான நேரடி தொடர்புகள், இணைந்து வாழ்தல், வாழ்க்கை கணக்குகள் உள்ளிட்ட திறன்களை தெரிந்து கொண்டனர்.
இவ்வாறு, கூறினார்.
