UPDATED : அக் 31, 2026 04:59 PM
ADDED : அக் 31, 2026 04:56 PM

கோவை: கரூர் மற்றும் கோவையில் அமைந்துள்ள வி.எஸ்.பி. பொறியியல் கல்லுாரிகளில் 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 14 இளங்கலை பாடப்பிரிவுகளையும் , 4 முதுகலை பாடப்பிரிவுகளையும் கொண்டு தன்னாட்சி மற்றும் ஆராய்ச்சி கல்லுாரிக்கான அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.
கல்வி குழும கல்லுாரியின் வெள்ளி விழா வருடத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் அறிவியல் கண்காட்சி நடந்தது. 20 மாவட்டங்களை சேர்ந்த 10,000-க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி மாணவர்களே உருவாக்கிய ரோபோக்கள், ட்ரோன்கள், ஏ.ஐ. தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பல அறிவியல் படைப்புகள் இடம் பெற்றன. பள்ளி மாணவர்களுக்கு ட்ரோன் ஷோ புது படைப்பாக காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியை கல்லுாரி தலைவர் பால்சாமி தலைமை வகித்தார். செயலாளர் விஜய், இயக்குனர்கள் நந்தினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
