/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலை கோவில் கும்பாபிஷேகம் பாதுகாப்பு ஏற்பாடு; கமிஷனர் ஆய்வு
/
மருதமலை கோவில் கும்பாபிஷேகம் பாதுகாப்பு ஏற்பாடு; கமிஷனர் ஆய்வு
மருதமலை கோவில் கும்பாபிஷேகம் பாதுகாப்பு ஏற்பாடு; கமிஷனர் ஆய்வு
மருதமலை கோவில் கும்பாபிஷேகம் பாதுகாப்பு ஏற்பாடு; கமிஷனர் ஆய்வு
ADDED : மார் 31, 2025 11:22 PM
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேக விழாவையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் ஆய்வு செய்தார்.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும், 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவிற்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பார்க்கிங் பகுதி, பக்தர்கள் படிக்கட்டு வழியாக கோவிலுக்கு செல்லும் பாதை, பக்தர்கள் நிற்கும் இடங்கள், முக்கிய பிரமுகர்கள் நிற்கும் பகுதி, பக்தர்கள் கோவிலிலிருந்து கீழே இறங்கும் பாதை, குடிநீர் மற்றும் உணவு வசதிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்தார்.
மலை மேல் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இருந்து, பழைய படிக்கட்டு பாதை வழியாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, ராஜகோபுரம் வழியாக, கீழே இறங்கி செல்ல வேண்டும்.
அதற்கு தகுந்த போல, பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

