ADDED : மார் 10, 2026 05:37 AM

கோவை: ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பாதுகாப்பு தொழில்நுட்பத் துறையில் தொழில் கல்வி இணைப்பை வலுப்படுத்தும் வகையில், அதெஸ் பாதுகாப்பு தொழில்நுட்ப சிறப்பு மையத்தை துவக்கியுள்ளது. அதெஸ் ஆட்டோமோட்டிவ் என்ஜினீயரிங் நிறுவனத்துடன் இணைந்து இம்மையம் துவங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி பேசுகையில், ''இச்சிறப்பு மையம் மாணவர்களின் புதுமை திறன்களை ஊக்குவிக்கும். பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்காற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஆதித்யா, தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன், அதெஸ் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் ராஜா தியாகராஜன், செயல் இயக்குனர் சேகரன், பொறியியல் கல்லுாரி முதல்வர் பொற்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
