/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செடிமுத்துார் ரோடு படுமோசம்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
/
செடிமுத்துார் ரோடு படுமோசம்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
செடிமுத்துார் ரோடு படுமோசம்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
செடிமுத்துார் ரோடு படுமோசம்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
ADDED : மே 31, 2025 12:31 AM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, செடிமுத்துார் ரோடு மிக மோசமாக உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
பொள்ளாச்சி அருகே, செடிமுத்துார் வழியாக மீனாட்சிபுரம், நெடும்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழித்தடம் உள்ளது.
இவ்வழியாக, விவசாயிகள் விளைபொருட்களை எடுத்து செல்லும் முக்கியத்தடமாக உள்ளதுடன், போக்குவரத்து நிறைந்த ரோடாக உள்ளது. இந்நிலையில், இந்த ரோடு மிகவும் மோசமாக உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
செடிமுத்துார் பகுதியில் தோட்டத்து வீடுகளில் இருந்து, விளைபொருட்களை கொண்டு செல்ல ரோடு வசதி உள்ளது. ஆனால், ரோடு குண்டும், குழியுமாக உருமாறியுள்ளதால், வாகனங்களில் செல்ல மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
மேலும், வாகனங்களில் விளைபொருட்களை எடுத்து செல்ல முடியாத சூழல் உள்ளது. மழை காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர்.
இந்த ரோட்டை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. தற்போது, மழை காலம் என்பதால், பள்ளங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி மையமாக மாறியுள்ளது.
பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி விபத்துகளை தடுக்க, ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.