/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுண்ணுயிரிகளை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்
/
நுண்ணுயிரிகளை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்
நுண்ணுயிரிகளை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்
நுண்ணுயிரிகளை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்
ADDED : ஏப் 09, 2025 10:25 PM
கோவில்பாளையம்; 'நுண்ணுயிரிகளை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்,' என, வேளாண் மாணவியர் தெரிவித்தனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை, நான்காம் ஆண்டு மாணவியர், கிராம தங்கல் திட்டத்தின் கீழ் களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 65 நாட்கள் இப்பயிற்சி நடைபெறுகிறது.
விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்களில் பயிற்சி, விவசாய நிலங்களை பார்வையிடுதல், விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி அளித்தல், நோய் மற்றும் பூச்சி தாக்கம் குறித்து ஆய்வு செய்தல் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கொண்டையம்பாளையத்தில் ஒரு தோட்டத்தில் கல்லூரி மாணவிகள் விதை நேர்த்தி குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
'பயறு வகை விதைகளில், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா போன்ற நுண்ணியிரிகளை பயன்படுத்தி, விதை நேர்த்தி செய்வதால், நோய் தாக்குதல் குறையும். விளைச்சல் அதிகரிக்கும். பல்வேறு பயன்கள் கிடைக்கும்,' என்றனர்.