/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தன்னிச்சையான உணவு கட்டுப்பாடு உடல் உறுப்புகளை பாதிக்கும்'; மருத்துவர்கள் எச்சரிக்கை
/
'தன்னிச்சையான உணவு கட்டுப்பாடு உடல் உறுப்புகளை பாதிக்கும்'; மருத்துவர்கள் எச்சரிக்கை
'தன்னிச்சையான உணவு கட்டுப்பாடு உடல் உறுப்புகளை பாதிக்கும்'; மருத்துவர்கள் எச்சரிக்கை
'தன்னிச்சையான உணவு கட்டுப்பாடு உடல் உறுப்புகளை பாதிக்கும்'; மருத்துவர்கள் எச்சரிக்கை
ADDED : ஆக 12, 2025 08:07 PM
மேட்டுப்பாளையம்; 'மருத்துவர்களின் ஆலோசனை இன்றி, சுயமாக உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் உடல் உறுப்புகள் பாதிக்கும்' என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்றைய அவசர உலகில் பலரும் உடலை மிகவும் 'பிட்'டாக வைத்திருக்க விரும்புகின்றனர். இதற்காக, பல்வேறு சமூக வலைதளங்களில் ஆன்லைன் டயட் வழிமுறைகளை எந்த மருத்துவ ஆலோசனையும் இன்றி அப்படியே பின்பற்றுகின்றனர். உடல் எடையை வேகமாக குறைப்பதால், உடல் உறுப்புகள் பாதிக்கப்படும், உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய, ஹோமியோபதி பிரிவு அரசு உதவி மருத்துவர் ஜெயஸ்ரீ மீனாட்சி கூறியதாவது:-
சமீப காலமாக மாணவர்களும், இளவயதினரும் மற்றும் வயதானவர்கள் கூட உடல் எடை குறைவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தன்னிச்சையாக டயட் கடைப்பிடிப்பது அதிகரித்து வருகிறது.
உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதால் புரதப்பவுடர் எடுப்பதுவும் கூட இதுபோன்ற அகால மரணங்களுக்கு காரணமாகிறது. உடலுக்கு சரிசம விகித உணவு அத்தியாவசிய தேவையாகும். புரதங்கள் மட்டும் எடுக்கும் பட்சத்தில் மற்ற சத்துக்கள் உடலுக்கு பற்றாக்குறையாகி விடுகிறது.
அதனால் தசைகள் மற்றும் எலும்புகள் வலுவிழந்து உடல் சோர்வு அடைவதுடன் மறதி மற்றும் மனநலக்குறைபாடுகள் ஏற்படுகிறது.
ஏற்கனவே சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்தம் இருப்பவர்கள் முறையற்ற டயட் தொடரும் பட்சத்தில் அவர்களது நோய் மேலும் தீவிரமடைகிறது. தவிர வருடத்திற்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து விட்டே டயட்டை தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.