/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதி விலைக்கு பர்னிச்சர் விற்பனை!
/
பாதி விலைக்கு பர்னிச்சர் விற்பனை!
ADDED : அக் 26, 2024 11:17 PM
கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பர்னிச்சர், பேஷன் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி கொடிசியா வர்த்தக வளாகத்தில், 'பிராம்ப்ட் டிரேட் பேர்ஸ்' நிறுவனம் சார்பில் நடந்துவருகிறது.
இக்கண்காட்சியில், 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், உயர்தர வெளிநாட்டு, உள்நாட்டு பர்னிச்சர் அதிகளவில் இடம் பெற்றுள்ளது. பண்டிகையை முன்னிட்டு, பாதி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தவிர, பேஷன் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், இன்டீரியர், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு தேவைக்கான பொருட்கள், என அனைத்தும் ஒரு கூரையின் கீழ் வாங்கலாம்.
வீட்டு தேவைகளுக்கு மட்டுமின்றி, அலுவலக தேவைகளுக்கும் தள்ளுபடி விலையில் பர்னிச்சர் வாங்கி செல்லலாம். சோபா, மடிப்பு நாற்காலி, சாதாரண நாற்காலி, பங்கர் படுக்கைகள், என அனைத்தும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் உத்தரவாதத்துடன் அளிக்கப்படுகின்றன. ஜீரோ சதவீத வட்டியில் உடனடி கடனுதவியுடன், முன்பணம் இல்லாமல் பொருட்களை வாங்கிச்செல்லலாம். இன்றும், நாளையும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.