/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலையில் களைகட்டுது 'சரக்கு' விற்பனை
/
மலையில் களைகட்டுது 'சரக்கு' விற்பனை
ADDED : மார் 26, 2025 09:02 PM

வால்பாறையில், ரொட்டிக்கடை, முடீஸ், சோலையாறுநகர், வால்பாறை நகர் ஆகிய நான்கு இடங்களில், டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. டாஸ்மாக் கடைகளில் குவாட்டருக்கு, 10 ரூபாயும், 'ஆப்' பாட்டிலுக்கு, 20 ரூபாயும் கூடுதலாக வசூலிக்கின்றனர்.
கடை திறக்காத நேரத்தில், அதிக விலைக்கு 'சில்லிங்' விற்பனை அமோகமாக நடக்கிறது. இது தவிர, வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியிலும், 'சில்லிங்' விற்பனை ஜோராக நடக்கிறது. இங்கு, குவாட்டருக்கு, 50 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.
தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் 'சில்லிங்' விற்பனை செய்வதால், வருமானத்தில் பெரும் பகுதியை மதுவுக்கு செலவிடுகின்றனர். வால்பாறை வரும் சுற்றுலா பயணியரை குறி வைத்து, தங்கும் விடுதிகளுக்கே 'சரக்கு' சப்ளை செய்யப்படுகிறது. அளவுக்கு அதிகமாக மது குடித்து, ரோட்டில் போதையில் 'மட்டை' ஆகிவிடுகின்றனர்.