ADDED : ஏப் 23, 2025 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி, சக்தி தகவல் மேலாண்மைக் கல்லுாரியில், 'இன்ஸ்டிடியூசன் ஆப் இன்னவேஷன் கவுன்சில்' வாயிலாக புதுமையான சிந்தனைகள் மற்றும் கண்டுபிடிப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது. துணை பேராசிரியர் கிரிபிரகாஷ், நுாலகர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
குறிப்பாக, புதுமையான கண்டுபிடிப்புகள், நடைமுறை செயல்பாடுகள், திட்ட அடிப்படையிலான கல்வி மற்றும் தீர்வுகள் குறித்து விளக்கப்பட்டது.
மாறி வரும் சூழலுக்கு ஏற்ப அவசியமான திறன்கள், பரிசோதனைகள், முயற்சி மற்றும் தோல்விகள் மட்டுமின்றி, அதில் பெறப்படும் அனுபவ தீர்மானங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

