/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேரா ஹோம் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி; மொபைல் வாங்கியவருக்கு கார் பரிசு
/
சேரா ஹோம் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி; மொபைல் வாங்கியவருக்கு கார் பரிசு
சேரா ஹோம் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி; மொபைல் வாங்கியவருக்கு கார் பரிசு
சேரா ஹோம் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி; மொபைல் வாங்கியவருக்கு கார் பரிசு
ADDED : ஜூலை 31, 2025 10:17 PM

கோவை; கோவை சுந்தராபுரம் பகுதியில் சேரா ஹோம் ஜங்ஷன் எனும் வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனை மையம் கடந்த 9ம் தேதி துவங்கப்பட்டது. 70,000 சதுர அடியில் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.
துவக்க விழாவை முன்னிட்டு, 3,000 ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்கு பவர்களுக்கு ஸ்லோகன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் பரிசாக கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றனர்.
ஸ்லோகன் போட்டியில் பங்கேற்றதில், 40 பேர் தேர்வு செய்யப்பட்டு சேரா ஹோம் ஜங்ஷன் வளாகத்தில் பரிசளிப்பு விழா நடந்தது.
இதில், முதல் பரிசாக கோவை குனியமுத்துாரை சேர்ந்த அயூப்கான், முனீரா பேகம் என்ற தம்பதிக்கு கார் வழங்கப்பட்டது.
பங்கேற்றவர்களுக்கு, ரூ. 5000 முதல் 50 ஆயிரம் வரை பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பரிசு பெற்றவர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
முதல் பரிசு வென்ற தம்பதிக்கு கார் சாவியை, சேரா ஹோம் ஜங்ஷன் நிர்வாக இயக்குனர் ஜோஸ் டைசன் மார்டின் வழங்கினார்.
நிகழ்வில், சி.ஓ.ஓ. ஜார்ஜ் மார்ஷல், நிர்வாகிகள் நிர்மல் அபுதாகீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.