/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆன்லைன் நிறுவனத்தில் திருடிய ஏழு பேர் கைது
/
ஆன்லைன் நிறுவனத்தில் திருடிய ஏழு பேர் கைது
ADDED : நவ 08, 2025 01:14 AM
போத்தனுார்: மலுமிச்சம்பட்டி அடுத்த ஒக்கிலிபாளையத்தில், பிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவன குடோன் உள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் இருவர் வாங்கிய சோப்பு பவுடர் திரும்ப வந்தது. அதில் சோப்பு பவுடருக்கு பதில், லேப்டாப் இருந்தது.
விசாரணையில், இதில் பொருட்கள் பேக்கிங் பிரிவில் பணிபுரியும், பொள்ளாச்சி விக்னேஷ், ராமநாதபுரம் கிஷோர்குமார், 24, வெள்ளலூர் செல்லும் வழியிலுள்ள கோணவாய்க்கால்பாளையம் ஸ்ரீசஞ்சய், திருப்பூர், சிரஞ்சீவி, 26, யோகேஷ், 26, கேரள மாநிலம், கோழிக்கோடு ஆஷ்லா, 25, முகமது ஆதில், 21, அஞ்சலி ஆகியோர் பொருட்களை மாற்றி, திருடியது தெரிந்தது.
இதையடுத்து, லேப்டாப், மொபைல் போன், வாட்ச், ஷூ, கேமரா உள்ளிட்ட ரூ.11.52 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. நிறுவன அமலாக்க அதிகாரி சக்திவேல் புகாரில், ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு பெண் ஊழியரை தேடுகின்றனர்.

