/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரில் 22 கிலோ கஞ்சா கடத்திய ஏழு பேர் சிறையில் அடைப்பு
/
காரில் 22 கிலோ கஞ்சா கடத்திய ஏழு பேர் சிறையில் அடைப்பு
காரில் 22 கிலோ கஞ்சா கடத்திய ஏழு பேர் சிறையில் அடைப்பு
காரில் 22 கிலோ கஞ்சா கடத்திய ஏழு பேர் சிறையில் அடைப்பு
ADDED : டிச 25, 2024 08:24 PM
கோவை; கோவையில் கல்லுாரி மாணவர்களுக்கு, விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்தி வந்தவர்களை,போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் இருந்து, ராவுத்தர் சாலைக்கு செல்லும் வழியில் கஞ்சா கடத்தி கொண்டு வருவதாக, சிங்காநல்லுார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர்.
அப்போது அங்கு ஒரு மரத்தடியில், இருவர்மூட்டைகளை காரில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்தவுடன், அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, சின்னியம்பாளையத்தை சேர்ந்த சாந்தகுமார், 19 மற்றும் வரதராஜபுரத்தை சேர்ந்த கோகுல் கண்ணன், 22 ஆகியோர் ஆந்திரா மாநிலத்திற்கு சென்று, அங்கு ஒரு கிலோ கஞ்சாவை ரூ. 5000க்கு வாங்கி வந்து, இங்கு கோவையில் உள்ள கஞ்சா டீலர்களுக்கு, சப்ளை செய்வதாக தெரிவித்தனர்.
இங்குள்ள சப்ளையர்கள், கோவையில் உள்ள கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., ஊழியர்கள், கூலி தொழிலாளிகள் என, பலத்தரப்பு மக்களுக்கு அதிக விலைக்கு, விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து, கஞ்சா கடத்தி வந்த சாந்தகுமார், கோகுல் கண்ணன் உட்பட ஏழு பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு மூட்டைகளில் 22 கிலோ கஞ்சா, கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

