/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடை மருத்துவமனை வளாகத்தில் சாக்கடை விவசாயிகள் எதிர்ப்பு
/
கால்நடை மருத்துவமனை வளாகத்தில் சாக்கடை விவசாயிகள் எதிர்ப்பு
கால்நடை மருத்துவமனை வளாகத்தில் சாக்கடை விவசாயிகள் எதிர்ப்பு
கால்நடை மருத்துவமனை வளாகத்தில் சாக்கடை விவசாயிகள் எதிர்ப்பு
ADDED : ஜன 20, 2025 06:22 AM

மேட்டுப்பாளையம்: காரமடை கால்நடை மருத்துவமனை வளாகத்தில், கழிவுநீர் செல்ல, ஊராட்சி சார்பில் சாக்கடை அமைக்க, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காரமடை கன்னார்பாளையம் சாலையில், சிக்காரம்பாளையம் ஊராட்சி எல்லையில், கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த கட்டடம் கட்டி 58 ஆண்டுகள் ஆன நிலையில், மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
அதனால் இங்கு புதிய மருத்துவமனை கட்ட, 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் சிக்காரம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், கால்நடை மருத்துவமனை வளாகத்தின் வழியாக, கழிவுநீர் செல்லும் சாக்கடை அமைக்க, அளவீடு செய்துள்ளனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கால்நடை மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் கூறியதாவது:
கால்நடைகளுக்கு தேவையான குடி தண்ணீர் வழங்க, மருத்துவமனை வளாகத்தில் போர்வெல் போடப்பட்டுள்ளது. மேலும் சிக்காரம்பாளையம் ஊராட்சி சார்பில் கழிவுநீர் சாக்கடை அமைக்க அளவீடு செய்துள்ளனர். அந்த அளவீடு போர்வெல் வழியாக வருகிறது.
சாக்கடை வழியாக கழிவுநீர் செல்லும் போது, போர்வெல்லின் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளது. மேலும் சாக்கடையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசும். இதனால் பணியாளர்கள் வேலை செய்ய முடியாத நிலை ஏற்படும். இதை மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.