/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடுகளை சுற்றிலும் கழிவுநீரால் 'உவ்வே'
/
வீடுகளை சுற்றிலும் கழிவுநீரால் 'உவ்வே'
ADDED : ஜூன் 29, 2025 12:40 AM

கோவை : உப்பிலிபாளையம் போலீசார் குடியிருப்பில் உள்ள, 'செப்டிக் டேங்க்' நிறைந்து வெளியேறும் கழிவுநீரால், அப்பகுதி முழுவதும் சுகாதாரமற்று உள்ளது. நிம்மதி இழந்து தவிக்கின்றனர் போலீஸ் குடும்பத்தார்.
கோவை மாநகர பகுதியில், பி.ஆர்.எஸ்., வளாகம், உப்பிலிபாளையம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில், போலீசார் குடியிருப்புகள் உள்ளன.
உப்பிலிபாளையத்தில் 150க்கும் மேற்பட்ட போலீஸ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். போலீசார் சமுதாயகூடமும் உள்ளது. இங்கு, கழிவுநீர் தொட்டி (செப்டிக் டேங்க்) நிறைந்து ஒரு மாதத்திற்கும் மேலாக, கழிவு நீர் வெளியேறி வருகிறது.
இதனால், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகள், முதியவர்கள், போலீஸ் அதிகாரிகள் என அனைவரும், மூக்கை பொத்திக்கொண்டு, வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில், 'ஒரு மாதத்திற்கும் மேலாக கழிவு நீர் வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. குடியிருப்பு பகுதிக்குள் நுழைய வேண்டும் என்றாலே, கழிவுநீரை தாண்டி தான் செல்ல வேண்டியுள்ளது.
தரை தளத்தில் வசிப்போர் மட்டுமின்றி, முதல் தளத்தில் வசிப்போருக்குக்கும் துர்நாற்றம் கடுமையாக வீசுகிறது. இங்கிருக்கும் சமுதாய கூடத்தில் அடிக்கடி திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்கும். மணப்பெண், மாப்பிள்ளை யாராக இருந்தாலும், கழிவுநீரை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. பல முறை புகார் அளித்தும், மாநகராட்சி பணியாளர்கள் கண்டுகொள்வது இல்லை' என்றனர்.