/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மையோனஸ்' கலந்து வந்ததால் கழிவுநீர் தேக்கம்; ேஹாட்டலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
/
'மையோனஸ்' கலந்து வந்ததால் கழிவுநீர் தேக்கம்; ேஹாட்டலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
'மையோனஸ்' கலந்து வந்ததால் கழிவுநீர் தேக்கம்; ேஹாட்டலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
'மையோனஸ்' கலந்து வந்ததால் கழிவுநீர் தேக்கம்; ேஹாட்டலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
ADDED : பிப் 04, 2025 11:54 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், தனியார் ேஹாட்டலில் இருந்து உணவு கழிவுகளை பாதாள சாக்கடையில் கலக்கப்படுகிறது. இதற்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குப்பையை தரம் பிரித்து வழங்குவதுடன், கழிவுகளை திறந்தவெளியிலோ, சாக்கடை கால்வாயிலோ வீசக்கூடாது என கடைக்காரர்களுக்கு நகராட்சி வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி நல்லப்பா வீதியில் உள்ள தனியார் ேஹாட்டலில் இருந்து கழிவுகள், பாதாள சாக்கடையில் விடுவதால் அவை அடைத்துக்கொள்ளவதாக நகராட்சி கமிஷனர் கணேசனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நகராட்சி கமிஷனர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உணவு கழிவுகள் அதிகளவு கலப்பதால், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழி அடைத்து இருப்பது தெரியவந்தது. இதனால், ேஹாட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி தனியார் ேஹாட்டலில், இருந்து பாத்திரம் கழுவும் நீருடன், 'மையோனஸ்' கலந்து பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் விடப்படுகிறது.
இதில் எண்ணெய், 'மையோனஸ்' கலப்பதால், சில நாட்களில் கட்டியாகிவிடும். இது அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதுபோன்று கழிவுகளை, பாதாள சாக்கடையில் விட வேண்டாம், என, ேஹாட்டல் உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, இரண்டாவது முறையாக இது போன்று செய்துள்ளதால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதே செயல் தொடர்ந்தால், கடைக்கு 'சீல்' வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ேஹாட்டல்களில் கழிவுகளை இவ்வாறு வெளியேற்றுவதை கண்டறிந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.