/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாக்கடை கால்வாய் அடைப்பு; ரோட்டில் கழிவு நீர்
/
சாக்கடை கால்வாய் அடைப்பு; ரோட்டில் கழிவு நீர்
ADDED : ஜூன் 15, 2025 10:12 PM

சூலுார்; சாக்கடை கால்வாய் அடைத்து, ரோட்டில் ஓடும் கழிவு நீரால், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்டது ஆசிரியர் நகர் பகுதி. இந்நகருக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் அடைத்து, பல நாட்களாக, கழிவு நீர் வெங்கிட்டாபுரம் ரோட்டில் ஓடியது. இதனால், கடும் துர்நாற்றத்தால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,' ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அனைத்தும், வெங்கிட்டாபுரம் ரோட்டில் உள்ள புளியமரம் அருகே வந்து பள்ளத்தை நோக்கி செல்லும். புளிய மரம் அருகே கால்வாய் அடைத்து கொண்டதால், பல நாட்களாக கழிவு நீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு புகார் அளித்தும் பயன் இல்லை,'என்றனர்.
இந்நிலையில், மீண்டும் ஊராட்சி செயலரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, தூய்மை பணியாளர்கள் அங்கு சென்று, அடைப்பை நீக்கி, கழிவு நீர் செல்ல வழி ஏற்படுத்தியதால், மக்கள் நிம்மதி அடைந்தனர். அந்த இடத்தில் சாக்கடை கால்வாயை அகலப்படுத்த வேண்டும், என, கோரிக்கை விடுத்துள்ளனர்.