/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதாள சாக்கடைக்கான கட்டணம் உயர்வு; தீர்மானத்தை ரத்து செய்ய ஆலோசனை
/
பாதாள சாக்கடைக்கான கட்டணம் உயர்வு; தீர்மானத்தை ரத்து செய்ய ஆலோசனை
பாதாள சாக்கடைக்கான கட்டணம் உயர்வு; தீர்மானத்தை ரத்து செய்ய ஆலோசனை
பாதாள சாக்கடைக்கான கட்டணம் உயர்வு; தீர்மானத்தை ரத்து செய்ய ஆலோசனை
ADDED : ஜூன் 26, 2025 10:08 PM
கோவை; பாதாள சாக்கடை இணைப்புக்கு வைப்புத்தொகை, மாதாந்திர பராமரிப்பு கட்டணத்தை மாற்றியமைப்பது தொடர்பாக, கோவை மாநகராட்சியில் மே மாதம் நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய, மேயர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சியில், மே மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புக்கு வைப்புத்தொகை மற்றும் மாதாந்திர கட்டணங்களை மாற்றியமைத்து, அவசர அவசரமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது, கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது. இச்சூழலில், அனைத்து கட்டட உரிமையாளர்களுக்கும் மாநகராட்சியில் இருந்து பாதாள சாக்கடை வரி புத்தகம் பொறியியல் பிரிவினர் மூலமாக வழங்கப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு வளாகத்தில் நான்கு குடியிருப்புகள் கட்டியிருக்கும் பட்சத்தில், நான்கு சொத்து வரி விதித்து புத்தகம் பெற்றிருந்தால், பாதாள சாக்கடை இணைப்பும் நான்காக கணக்கில் கொள்ளப்பட்டு, நான்கு பாதாள சாக்கடை வரி புத்தகம் வழங்கப்படுகிறது. இது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி தலைமையில் நேற்று சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. மண்டல தலைவர்கள் கதிர்வேல், மீனா, தெய்வயானை, நிலைக்குழு தலைவர்கள் மாரிசெல்வன், சந்தோஷ், சாந்தி, தீபா, கவுன்சில் குழு தலைவர்கள் கார்த்திகேயன், அழகு ஜெயபாலன், ராமமூர்த்தி, சாந்தி, சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு வைப்புத்தொகை மற்றும் மாதாந்திர கட்டணங்களை மாற்றியமைத்து நிறைவேற்றிய தீர்மானங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இவ்விரு தீர்மானங்களையும் இன்று (26ம் தேதி) நடைபெறும் மாமன்ற கூட்டத்தில், அனைத்து கட்சி கவுன்சிலர்களின் ஆதரவுடன் ரத்து செய்வதென முடிவெடுக்கப்பட்டது. வீடு வீடாகச் சென்று பாதாள சாக்கடை வரிக்கு புத்தகம் கொடுப்பதை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனத்துக்கு கொண்டு சென்று நிறுத்துவது மற்றும் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்துள்ள கட்டணங்களை அழிப்பது தொடர்பாக முடிவெடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.