/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹாக்கி போட்டியில் சக்தி அணிக்கு வெற்றி
/
ஹாக்கி போட்டியில் சக்தி அணிக்கு வெற்றி
ADDED : அக் 07, 2025 11:26 PM

கோவை; கோவை அவிநாசி ரோடு, சி.ஐ.டி., கல்லுாரியில் அண்ணா பல்கலை, 9வது மண்டல அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டி நடந்தது. பல்வேறு கல்லுாரி அணிகள் பங்கேற்ற நிலையில், ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியினர் அரையிறுதி போட்டியில் சி.ஐ.டி., கல்லுாரி அணியுடன் மோதினர்; இதில், 10-0 என்ற கோல் கணக்கில் ஸ்ரீசக்தி அணியினர் வெற்றி பெற்றனர்.
இறுதிச்சுற்றில், ஸ்ரீ சக்தி கல்லுாரி அணியும், பார்க் பொறியியல் கல்லுாரி அணியும் மோதின.
இதில், ஸ்ரீ சக்தி கல்லுாரி அணி, 10-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
சக்தி பொறியியல் கல்லுாரி மாணவர்கள் ஐந்தாவது ஆண்டாக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.